🕰️ மனிதன் நேரத்தோடு போராடும் ஒரு விசித்திர ஜீவன் – சிரிப்பதற்கும் சிந்திப்பதற்குமே😄
மனிதன்… இந்த வார்த்தைச் சொன்னதும் நமக்கு தெரிந்த மொத்த வரலாற்றையும் கண்ணுக்குள் கொண்டு வந்து விடுகிறோம். ஆனால் உண்மையாக சொல்லப்போனால், இந்த மனிதன் என்ன செய்கிறான் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த காலத்தில் (நாம் மறந்து விட்ட ஒரு நேரம்) மனிதன் கூழைத் தேடி வனாந்திரங்களில் ஓடியவன். இன்று அவன் கூழ் கிடைத்தாலும், "Diet plan"-ல இருக்கிறேன் என்று அதை மறுக்கிறான்.
😎 இன்று மனிதன் எதை இழந்தான்?
-
நேரம்
காலை எழுந்ததும், “இன்னும் 5 mins” என்று கண் சிமிட்டும் முன் நேரமே முழுக்க ஓடி விடுகிறது.
ஆனால் அதே மனிதன் TikTok-ல் ஒரு பாம்பு ஆடும் வீடியோவைக் பார்த்து 3 மணி நேரம் அவனை அறியாமலே கழிக்கிறான்.
அதற்குள் காலையில் எழுந்தது மாலையாகிறது. பிறகு நண்பர்களிடம் ஒரு வார்த்தை
சொல்லுவான்:“நேரமே இல்லைடா… Busy life!”
(கட்டுக்கணக்கில்லாத பிஸி.) -
அமைதி
அமைதி என்றாலே அது மனதை ஒருநிலை படுத்தும் விடயங்களில் தான் உள்ளது (இறை வணக்கம், தியானம், etc..) ஆனால்
வீட்டுக்குள் 5.1 Surround Sound-ல் இதயம் திகைக்கிற மாதிரி படத்தைக் பார்த்துக்கொண்டு .
பின்பு ஃபேஸ்புக்கில் ஒரு Quote போட்டுவிடுவான்:“Life is full damage. எண்டு” 🤦♂️
(என்னவாம் நிம்மதி இழந்து தவிக்காராம்..போடா நீயும் ஒண்ட story யும்😂) -
உண்மையான உறவுகள்
WhatsApp-ல் 356 குழுக்கள்.
"Good Morning" Sticker அனுப்பும் 200 பேருடன் "நேரில்" பார்த்த சமயம் 3 வருடங்களுக்கு முன்.
வீட்டிலிருக்கிறவரிடம் பேச நேரமில்லை, ஆனா "Status யாரெல்லாம் பார்த்தாங்க?"ன்னு ஒரு மணி நேரம் ஆழ்ந்த ஆய்வு செய்கிறான்.வாடா மனிதா, உன் வாழ்கை “seen by 47 வயது” ஆகி விட்டது.
🤹♂️ மனிதனின் 'தற்கால' நடவடிக்கைகள்:
-
தானே வாங்கிய ஸ்மார்ட்வாட்ச் தான் ஒரு நாள் அவனை அறிவுறுத்தும்:
"You are a wasteful person. என்று " -
Yoga class-க்கு Stress-க்கு வருகிறான்.
Parking கிடைக்கவில்லைன்னு இன்னொருத்தரை சண்டை போட்டுத் தள்ளுகிறான். -
"நிறைவான வாழ்க்கை வேண்டும்" என்று பிள்ளைக்கு சொல்லிக்கொண்டு,
எங்கே Online offer இருக்கிறது என்று Shopee-யில் தெரிஞ்சுக்கிறான். "Gym body" என்று எங்களிடம் பீத்திக்கொல்கின்றான், மனைவி Call எடுப்பதை அறிந்தால் தான் வாகனத்தில் வந்தேன் என்பதையும் மறந்து வீட்டுக்கு ஓடி விடுகின்றான்
🧠 மனிதன் இழந்தது எது தெரியுமா?
-
நேரம்!
-
சிந்தனை!
-
மெளனம்!
-
உணர்வுகள்!
-
வாழ்க்கையின் சுவை!
அது போயி, இப்போ வாங்கிருக்கிறான்:
-
EMIs
-
Battery Low
-
Notifications
-
Filters
-
மற்றும் “Recharge செய்யவும் உங்கள் டேட்டா முடிந்துவிட்டது” என்ற அறிவிப்பு.
மனிதனே!
நீயே உன் வாழ்க்கையை ஒரு “loading...” ஸ்கிரீன் மாதிரி விட்டு வைத்துவிட்டாய்.
நீ ஒவ்வொரு நாளும் பீட்ஸா போலவே… மேலே நிறைய toppings வைத்தாலும், உள்ளே காலியாக இருக்கின்றாய்.
அது ஏன்?
நீ நேரத்தை ரசிக்காமல், அதை 'Kill Time' பண்ணிக்கொண்டு இருக்கிறாய்.
இப்போ நீ நேரத்தோடு வாழவில்லை… நேரம் தான் உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சிந்திப்போம் வாழ்கையை திருத்துவோம்!!
உங்கள் வாழ்வில் நடந்தவற்றை மறக்காமல் comment இல் கூறுங்கள்
It's truth😔
ReplyDeleteyess..😂
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletefact💯
ReplyDelete