"ஒரு டுவிட்டால் உலகம் பதற வைக்கும் எலான்"
உலகின் மிகப்பெரிய செல்வந்தராக திகழும் எலான் மாஸ்க், தனது வாழ்க்கையை “சாதிக்க வேண்டும்” என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் நிர்மாணித்துக் கொண்டவர். 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியா என்னும் நகரில் பிறந்த இவர், சிறுவயதிலேயே கணினி மீது ஆர்வம் கொண்டார். 12 வயதில் BASIC மொழியில் “Blastar” என்ற வீடியோ கேமைக் கட்டமைத்து $500க்கு விற்று, தொழில்நுட்பத்தில் தனது முதல்பாதையைத் தொடங்கினார்.
அவரது பெற்றோர் வேறுபட்ட உலகங்களைச் சேர்ந்தவர்கள். தந்தை பொறியாளர்; தாயார் கன்பேனி மாடல். பள்ளியில் bullying க்கும் உள்ளாகிய மாஸ்க், தனியாகவே சிந்திக்கவும், கற்பதற்கும் பழகினார். இந்நிலையில் 17வது வயதில் கனடாவுக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவிற்குச் சென்று, பஞ்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் இயற்பியல் பயின்றார். ஆனால், உண்மையான வாழ்க்கை பாடங்கள் கல்லூரிக்கப்பிறகே தொடங்கியது.
1995ல் சகோதரருடன் இணைந்து Zip2 எனும் முதல்நிலை இணைய நிறுவத்தை தொடங்கினார். அதனை Compaq நிறுவனத்திற்கு $307 மில்லியனுக்கு விற்றதும், மாஸ்க் வணிக உலகில் அடித்தலை கட்டினார். தொடர்ந்து X.com என்னும் ஆன்லைன் வங்கி நிறுவத்தை தொடங்கினார். இது பின்னர் PayPal ஆக மாறி eBay-க்குப் $1.5 பில்லியனுக்கு விற்பனையானது.
இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருந்தது பெரும் சவால்கள். 2002ல் SpaceX நிறுவனத்தைத் தொடங்கிய மாஸ்க், ஆரம்ப மூன்று முயற்சிகளில் ராக்கெட் வெடித்து நொறுங்கியது. கடைசியில் நான்காவது முயற்சியில் வெற்றி கண்டதும், NASA உடன் ஒப்பந்தம் கிடைத்தது. அதன்பின்னர் Tesla நிறுவனத்தில் பங்கு பெற்று, அதை உலகத்திற்கே மின்சார வாகனங்களை விரும்புமாறு மாற்றினார். இதனால் அவர் வெறும் தொழிலதிபர் அல்ல, நவீன தொழில்நுட்ப புரட்சியின் வழிகாட்டியாக மாறினார்.
எலான் மாஸ்க் தனது வெற்றிகளைவிட, தோல்விகளை பெரிதாகக் கொண்டாடுபவர். “வெற்றி என்பது ஒரு தேர்வாகும், தோல்வி தான் ஒரு பாடமாகும்” என்பதே அவரது தத்துவம். இதற்கான முக்கிய உதாரணம் – SpaceX, Tesla, Neuralink, The Boring Company, மற்றும் Twitter (இப்போது X) ஆகிய நிறுவனங்களும்.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் சிக்கல்களால் நிரம்பியுள்ளது. அவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார். மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். அவரது ஒரே மகனான Xavier தற்போது transgender ஆகிப் பாலினமும் பெயரும் மாற்றியுள்ளார். இவரது குழந்தைகளுக்கு வழக்கமான கல்வி தேவையில்லை என நம்பும் மாஸ்க், தனது SpaceX வளாகத்தில் “Ad Astra” என்னும் தனிப்பட்ட பள்ளியை துவக்கினார். இதில் புத்திசாலித்தனம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு கல்வி அளிக்கப்படுகிறது.
மாஸ்க் Asperger’s syndrome உடையவர் என்பதையும் அவர் Saturday Night Live நிகழ்ச்சியில் தானே அறிவித்தார். இதனால் சமூக உறவுகளில் சிக்கல் இருந்தாலும், சிந்தனை திறன், கவனம் ஆகியவை அதிவேகமாக இருக்கும்.
அவர் ஒரு உண்மையான பசுமை தலைவர் இல்லை என்பது மறைக்க முடியாத உண்மை. அவர் vegetarian அல்ல. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மின்சார வாகனங்களை நவீன உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இதுவே அவர் எதிர்மறைகளுக்குள்ளாகும் பல காரணங்களில் ஒன்று.
2022இல் Twitterஐ $44 பில்லியனுக்கு வாங்கியதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் X என மாற்றிய அவர், பல விதமான மாற்றங்களை கொண்டு வந்தாலும், அதன் விளம்பர வருமானம் குறைந்தது, பல ஊழியர்கள் விலகினர்.
இது போல் பல்வேறு நேரங்களில் எலான் மாஸ்க் செய்த காரியங்கள் பொதுமக்களால் புரியாதவையாக இருந்தாலும், அவரது நோக்கம் மனித இனத்திற்கே ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குவது என்பது உண்மை.
தற்போது, Bloomberg புள்ளிவிவரங்கள் அடிப்படையில், அவரது சொத்து மதிப்பு சுமார் $365 பில்லியன் முதல் $423 பில்லியன் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் நாளாந்த வருமானம் $90 மில்லியனைத் தாண்டுகிறது, சில நேரங்களில் அது $100 மில்லியனுக்கும் மேல் செல்கிறது. இவ்வளவு சம்பளம் அவர் நேரடியாக எங்கிருந்தும் பெறவில்லை; மாறாக, Tesla, SpaceX உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள பங்குகளிலிருந்தே பெறுகிறார்.
மனிதர்களுக்குள் “பைத்தியக்கார நபர்” என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் மாஸ்க், ஒரு தடவை தனது Tesla பதவியை “Technoking” என மாற்றினார். CFO-வை “Master of Coin” என அழைத்தார். இவரது அதிகாரமும், அலட்டுமானமும் ஒன்றாக கலந்து, ஒரு தனிச்சிறப்பான ஆளுமையை உருவாக்குகிறது.
இன்று இவர் உலக பணக்காரர்களில் முதலிடம் வகிக்கிறார். ஆனால், அவர் ஒரு விபரீதமான தொழிலதிபர் அல்ல — அவர் ஒரு கனவுக் கண்ட விஞ்ஞானி. வெறும் பணம் சம்பாதிப்பதை விட, விண்வெளிக்குள் மனிதனை அழைத்துச் செல்லும் கனவைப் பின்னுகின்றார். அவரது பெயரை சுற்றி புகழும் விமர்சனமும் எப்போதும் நிலைத்து நிற்கும். ஆனால், மாஸ்க் என்பவர், இன்று நம்மால் பேசப்படும் தொழில்நுட்ப எதிர்காலத்தின் கட்டமைப்பாளர்.
எலான் மாஸ்க் என்ற பெயர் இன்று உலகின் செல்வசாலியான தொழிலதிபராக மட்டுமல்ல, எதிர்கால மனித இனத்தின் வடிவமைப்பாளராகவே பரப்பளவில் பேசப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றி அறியப்படாத சில உண்மைகள், அவரை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வழிகாட்டுகின்றன. மாஸ்க் பொறியியல் பட்டம் பெற்றவர் அல்ல, ஆனால் SpaceX மற்றும் Tesla போன்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களை தானாகவே கற்றுக் கொண்டு, ஒரு “சுயமுயற்சியாளர் பொறியாளர்” என அழைக்கப்படுகிறார். அவர் தயாரித்த ராக்கெட் எஞ்சின்களின் கணக்கீடுகள், வரைபடங்கள், தொழில்நுட்ப வடிவமைப்புகள் – அனைத்தையும் அவர் நேரடியாக பார்வையிட்டு, பல சமயங்களில் தானே திருத்தும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் ஆழமாக ஈடுபட்டவர்.
மனித இனத்திற்கு ஆபத்தாக மாறக்கூடிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைப் பற்றிய கவலையை பல நேரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் AI வளர்ச்சியில் போட்டிபோடும் வேளையில், மாஸ்க் மட்டும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார். இதனால்தான் அவர் xAI எனும் நிறுவனத்தை துவங்கினார், அதில் “உண்மையை தேடும் புனிதமான நுண்ணறிவு” உருவாக்கவே அவர் விரும்புகிறார்.
பலர் எலான் மாஸ்க் என்றால் பணக்காரர் என நினைப்பார்கள். ஆனால் அவரிடம் ஒருபோதும் பணம் நிரம்பி இருந்தது இல்லை. Zip2 நிறுவனத்தை விற்ற பிறகு வந்த பணத்தில் பெரும்பகுதியை பிற நிறுவனங்களில் முதலீடு செய்ததால், ஒரு கட்டத்தில் அவர் நண்பர்களின் வீட்டில் தங்கியதுபோல couch-surfing செய்ததாக அவர் கூறியிருக்கிறார். ஒரு உலக பணக்காரன் – வீட்டில்லாமல் நாமே கதைகள் படிப்பது போல – பலருக்கே தெரியாத உண்மை இது.
இவரது சொத்து மதிப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது என்று நாம் நினைத்தாலும், அவர் வரலாற்றில் ஒரே ஆண்டில் நடந்த மிகப்பெரிய சொத்து இழப்பை சந்தித்தவர் என்பது மிகக் குறைவாக பேசப்படுகிறது. 2022இல் $340 பில்லியன் இருந்த சொத்து மதிப்பு, 2023இல் $137 பில்லியனுக்கு வீழ்ந்தது. இது ஒரு மனிதரின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய நஷ்டமாக Guinness World Record-ல் பதிவு செய்யப்பட்டது.
இவர் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயர்கள் மிக வித்தியாசமானவை. “X Æ A-12”, “Exa Dark Sideræl”, “Techno Mechanicus” போன்ற பெயர்கள் பொதுவாக யாராலும் உச்சரிக்க முடியாதவையாக உள்ளன. இவரது எண்ணம் – பெயர் என்பது ஒரு அடையாளம் மட்டுமே; அதில் தனித்துவம் இருக்க வேண்டும் என்பதே.
Neuralink என்னும் நிறுவனத்தின் மூலம் இவர் செய்கிற பரிசோதனைகள் மிக ஆழமான விஞ்ஞான தளத்தில் நடக்கின்றன. 2024இல் முதல் முறையாக மனித மூளைக்குள் கணினி சிப் நுழைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இது முடங்கியவர்களுக்கு உதவியாயினும், மனித ஒழுக்கநெறி மற்றும் மூளையின் தனிப்பட்ட உரிமை குறித்து பல கேள்விகளையும் எழுப்பியது. இவ்விஷயம் குறித்து பெரும்பாலான ஊடகங்கள் பேசவே இல்லை.
அவரது நிறுவனங்களில் வேலை செய்யும் பல ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்யும் அளவுக்கு அதிகப்படியான அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். அவர் பல முறை, “நீங்கள் 100 மணி நேரம் வேலை செய்தால், மற்றவர்கள் ஒரு ஆண்டில் செய்யும் விஷயத்தை நீங்கள் நான்கு மாதத்தில் முடிக்க முடியும்” எனக் கூறியிருக்கிறார். இது அவரது வெற்றியின் ரகசியமாகவே சிலர் பார்ப்பார்கள்; ஆனால் சிலர் இதனை மனிதாபிமானமற்ற முறையாகவே விமர்சிக்கிறார்கள்.
Starlink தொழில்நுட்பம் மூலம் தற்போது அவர் உலகத்தின் பல பகுதிகளுக்கு இன்டர்நெட் தருகிறார். ஆனால் அவர் ஒரு முறையில் உக்ரைன் போருக்காக இதைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்தார். இதனால் அமெரிக்க பாதுகாப்புத் துறையே பதறியது. ஒரு தனிநபரிடம் உலகளாவிய தகவல் தொடர்பு கட்டுப்பாடு இருக்கின்றது என்பது அரசியல் ரீதியாக ஆபத்தானதென்பதை அந்நேரத்தில் உலகம் உணர்ந்தது.
அவரது நகைச்சுவை உணர்வும் வெறித்தனமாகவே உள்ளது. ஒருமுறை Tesla பங்கு விலையை 420 டாலராக வைத்திருப்பதாக Twitter-இல் கூறினார். (420 என்பது கனாபிஸ் குறிக்கையைச் சுட்டும் எண்.) இது வழக்காக மாறி SEC விசாரணையையும் அவர் சந்திக்க வைத்தது. இந்த நகைச்சுவைத் திறனை அவரது followers ரசித்தாலும், அது நேரடியாக பங்குச் சந்தையை பாதிக்கிறது என்பது மறைக்கப்பட்ட உண்மை.
இவர் ஒரு வீடியோ கேம் ஆசைவாளர். Bioshock, Deus Ex, Civilization போன்ற strategy வகை கேம்கள் தான் அவருக்கு பிடித்தவை. “இவையே தான் எனக்குப் வாழ்க்கை திட்டமிடுதல் கற்றுத்தந்தன” என்கிறார்.
இத்தனை சுவாரஸ்யங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் ஒரு மனிதர் எப்படி ஒரு புரட்சி புரிந்தார் என்பதை நம்மிடம் வெளிக்கொணர்கின்றன. அவரைப் பற்றிய விமர்சனங்கள், புகழ்கள் இரண்டும் வெவ்வேறு கோணங்களில் பேசப்பட்டாலும், அவரை நம்மால் ஒரு வரியில் விவரிக்க முடியாது – அவர் ஒரு புதிர்...
👍👍
ReplyDelete